1.இ ஜிங் (I CHING — 易经)
நூல் அறிமுகம்
இ ஜிங் (I Ching) என்பது சீனாவின் பண்டைய தத்துவப் பாரம்பரியத்தில் மிக முக்கியமான நூல்களில் ஒன்றாகும். கிமு 1000ஆம் ஆண்டுகளில் தோன்றிய இந்நூல், பிரபஞ்சத்தின் மாற்றங்களையும், வாழ்க்கையின் ஒழுங்கையும் விளக்குகிறது. இதில் உள்ள 64 குவாக்கள் (Hexagrams) மற்றும் யாங்-யின் (阴阳) கோட்பாடு ஆகியவை, உலகின் இயக்கத்தைப் புரிந்து கொள்ள உதவுகின்றன.
முதலில் இது ஒரு ஜோசிய நூலாக (占卜) பயன்படுத்தப்பட்டாலும், காலப்போக்கில் இது அறிவு, நன்னெறி மற்றும் வாழ்க்கை வழிகாட்டியாக மாறியது. இந்த முதல் முழுமையான தமிழ் மொழிபெயர்ப்பு, இ ஜிங்-ன் ஆழமான பொருள்களை தெளிவாக விளக்குகிறது. ஒவ்வொரு குவாவின் பெயர், உருவாக்கம், விளக்கம் மற்றும் யாக் (爻) சொற்கள் ஆகியவற்றுடன், ஜோசியம் எடுக்கும் முறைகளும் எளிய தமிழில் விளக்கப்பட்டுள்ளன.
இந்நூல்:
கிழக்கத்திய தத்துவம் மற்றும் பண்பாட்டில் ஆர்வமுள்ளவர்களுக்கு,
உளவியல், மெய்யியல் மாணவர்களுக்கு,
மாற்றங்களை எதிர்கொள்ளும் பொதுமக்களுக்கு
ஒரு முக்கியமான வழிகாட்டியாக அமையும்.